செய்திகள்
மலிவு விலையில் பெரிய வெங்காயம் விற்பனையை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்த காட்சி.

கூட்டுறவு சங்கம் மூலம் மலிவு விலையில் பெரிய வெங்காயம் விற்பனை- கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

Published On 2020-10-31 12:26 GMT   |   Update On 2020-10-31 12:26 GMT
பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் மலிவு விலையில் பெரிய வெங்காய விற்பனையை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
பவானி:

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பெரிய வெங்காயத்தை மலிவு விலையான ரூ.45-க்கு விற்பனை செய்வதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பெரிய வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில் குமரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் மற்றும் சின்னபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் கட்டமாக 1 டன் வெங்காயம் சுமார் 4 மணி நேரத்தில் விற்பனையானது. இதைத்தொடர்ந்து அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News