செய்திகள்
பணியிடை நீக்கம்

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் சேர்ந்த இளநிலை உதவியாளர் நீக்கம்

Published On 2020-10-28 09:08 GMT   |   Update On 2020-10-28 09:08 GMT
கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் சேர்ந்த இளநிலை உதவியாளரை பணிநீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு திருக்கோவிலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த போது காலமானார்.

இதையொட்டி கருணை அடிப்படையில் அவரது மகன் ஏழுமலை என்பவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த 13.2.2008-ம் ஆண்டு அவர் பணியில் சேர்ந்தார். தற்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே ஏழுமலையின் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கராபுரம் உதவிகோட்ட பொறியாளர் பிரபாகரன் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிந்து தலைமறைவான ஏழுமலையை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் போலி சான்றிதழ்கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஏழுமலையை நிரந்தர பணிநீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News