செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சை

Published On 2020-10-28 08:58 GMT   |   Update On 2020-10-28 08:58 GMT
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இன்று முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சை பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரி:

கொரோனா தொற்று காரணமாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜிப்மரில் இன்று (புதன்கிழமை) முதல் புறநோயாளிகள் சிகிச்சை பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியது.

சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று டாக்டருடன் செல்போனில் மருத்துவ கலந்தாலோசனையை கட்டாயமாக பெற வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு துறைகளுக்கும் தொலைபேசி எண்களின் விவரங்கள் ஜிப்மர் இணையதள முகவரியில்www.jipmer.edu.in தரப்பட்டுள்ளது

ஹலோ ஜிப்மர் என்ற ஆன்ட்ராய்டு செயலி உதவியுடனும் முன் அனுமதி பெற்று தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனை, சிகிச்சை சேவைகளை பெறலாம்.

தொலைபேசி மூலம் மருத்துவ கலந்தாலோசனையின் போது நேரில் மருத்துவ ஆய்வு தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் ஜிப்மர் வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்த முன் அனுமதிக்கான கைபேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே ஜிப்மரின் உள்ளே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்து வருவது கட்டாயமாகும். மேலும், நோயாளியுடன் ஒருவர் மட்டுமே வரலாம் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொற்றானது ஆஸ்பத்திரியின் வெளிப்புற சேவை பிரிவுகளில் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News