செய்திகள்
அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியை குட்டிச்சுவராக்கியது, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி- அமைச்சர் புகார்

Published On 2020-10-27 03:16 GMT   |   Update On 2020-10-27 03:16 GMT
புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.
புதுவை:

புதுவை அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிருமாம்பாக்கம், பாகூர் ஏரி சுற்றுலா திட்டம், பனித்திட்டு உறைவிடப்பள்ளி, கடற்கரை சாலை பணி, கிருமாம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டங்கள் எதுவும் செய்யாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது கவர்னர் சத்துணவு வழங்க தேவையில்லை. அதற்கு பதிலாக பணமாக கொடுங்கள் என்று கோப்பு அனுப்பி உள்ளார்.

கவர்னர் கிரண்பேடி திட்டங்களை முடக்கி, காங்கிரஸ் ஆட்சியை செயல்பட விடாமல் தடுக்கிறார். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் தொடர்ந்து பல திட்டங்களை நாங்கள் போராடி மக்களுக்கு செய்து வருகிறோம். ரூ.21 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News