செய்திகள்
கோப்புபடம்

புரட்டாசி மாதம் முடிவடைந்தது - மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரிப்பு

Published On 2020-10-19 15:17 IST   |   Update On 2020-10-19 15:17:00 IST
புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:

புரட்டாசி மாதத்தில், பக்தர்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து வழிபாடு நடத்துவது வழக் கம். இதனால் இறைச்சிகள் விற்பனை கடந்த ஒரு மாதமாக மந்தமாக இருந்தது. இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டிறைச்சி, கோழிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக விற்பனையானது. புதுக்கோட்டை மீன் மார்க்கெட் மற்றும் ஆங்காங்கே உள்ள மீன்கடைகளிலும் மீன்கள் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாக அவற்றின் விலை சற்று உயர்ந்திருந்தது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு மீன் கடையில் வஞ்சரம் கிலோ ரூ.500-க்கும், நகரை ரூ.250-க்கும், முறல் மீன் ரூ.350-க்கும் இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ.400-க்கும் விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலைகள் வேறுபட்டன. மீன்களை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. இதேபோல ஓட்டல்களிலும் அசைவ உணவு விற்பனை நேற்று அதிகரித்தது.

Similar News