செய்திகள்
காரைக்கால் ஓடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
காரைக்கால் ஓடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
மயிலாடுதுறை குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு குத்தாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காரைக்கால் ஓடுதுறை அருகே சாலையில் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சிலம்பரசன் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.