செய்திகள்
ராமதாஸ்

அதிவேக ரெயில்களில் அனைத்து பெட்டிகளையும் ஏ.சி.யாக மாற்றுவதா? ராமதாஸ் கண்டனம்

Published On 2020-10-13 08:01 IST   |   Update On 2020-10-13 08:01:00 IST
அதிவேக ரெயில்களில் அனைத்து பெட்டிகளையும் ஏ.சி.யாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மணிக்கு 130 கிலோ மீட்டருக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் ‘ஏ.சி.’ கொண்டவையாக மாற்றப்படும் என ரெயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ரெயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

அனைத்து ரெயில்களிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50 சதவீத பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம்பெறவேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடரவேண்டும். ரெயில்வே துறை ஏழைகளின் தோழனாக தொடரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News