செய்திகள்
மூதாட்டிக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

Published On 2020-10-07 23:45 IST   |   Update On 2020-10-07 23:45:00 IST
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தில் அலமேலு(வயது 85). இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றியும், ஆதரவற்ற நிலையிலும் இருப்பதை அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, அவருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

அதே போன்று கடந்த மாதம் பொன்பரப்பி கிராமத்திற்கு நேரில் சென்று 110 வயது மூதாட்டியான பொன்னி என்பவருக்கு உதவி செய்தார். அதனை தொடர்ந்து இந்த மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பரம சாந்தி என்ற அமைப்பின் உதவியுடன், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று மூதாட்டி பொன்னியை நலம் விசாரித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

Similar News