செய்திகள்
தாய் கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தாய் கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த கோடி தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சத்தியன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாயிடம் கூறினார். மது குடிப்பதை கண்டித்த அவரது தாயார் முதலில் குடி பழக்கத்தை நிறுத்து. அதன் பின்னர் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வருத்தம் அடைந்த சத்தியன் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.