செய்திகள்
கொரோனா பரிசோதனை

முககவசம் அணியாத 130 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-10-04 13:36 IST   |   Update On 2020-10-04 13:36:00 IST
கறம்பக்குடி பகுதியில் முககவசம் அணியாத 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கறம்பக்குடி:

கறம்பக்குடி வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் துரைமாணிக்கம் மற்றும் ஊழியர்கள் கறம்பக்குடி சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம், கடைவீதி ஆகிய பகுதிகளில் கொரோனா ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற முககவசம் அணியாத, வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள், பாதசாரிகள் ஆகியோரை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது சிலர் சுகாதார துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். நேற்று மட்டும் கறம்பக்குடி பகுதியில் முககவசம் அணியாத 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாகன ஒட்டிகளை சுகாதார துறை ஊழியர்கள் விரட்டி பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News