செய்திகள்
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகன் சந்துரு (வயது 23), இவரது நண்பர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன் (22). பட்டதாரி வாலிபர்களான அவர்கள் இருவரும் சென்னையில் நடைபெறும் ஒரு தேர்வுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். சந்துரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை சித்தேரிமேடு கிராமம் பகுதியில் வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சந்துரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.