செய்திகள்
பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.

ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-09-28 10:13 GMT   |   Update On 2020-09-28 10:13 GMT
ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சிக்குட்பட்ட கடாம்பூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் டாஸ்மாக் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூடினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்ற மனு அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News