செய்திகள்
கைது

ஒடுகத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2020-09-27 15:34 IST   |   Update On 2020-09-27 15:34:00 IST
ஒடுகத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:

ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆம்பூர் தாலுகா மாதனூரை அடுத்த பாலாஜி நகரை சேர்ந்த ஆனந்தன் (வயது 39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.500 மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News