செய்திகள்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடையை பாரதி எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்.

சீர்காழியில் செல்போன் கடையில் தீ விபத்து- ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2020-09-23 14:13 GMT   |   Update On 2020-09-23 14:13 GMT
சீர்காழியில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.
சீர்காழி:

சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் கடிகாரம் மற்றும் செல்போன் கடை நடத்தி வருபவர் சுரேஷ்குமார் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் எதிர்பாராமல் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கடிகாரங்கள், செல்போன்கள் எரிந்து நாசமாகின. 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார்.

அப்போது கூட்டுறவு சங்க துணை தலைவர் மணி, வக்கீல் நெடுஞ்செழியன், தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணை செயலாளர் பரணிதரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News