செய்திகள்
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளாளர் சஜீன்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் அனைத்து சாலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதனை இதுவரை சரிசெய்யாத காரணத்தால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள்.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சத்துவாச்சாரி பகுதியில் உடனடியாக சாலைகளை சீரமைக்காவிட்டால் 2-வது மண்டல அலுவலகத்துக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.