செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கிள்ளுக்கோட்டையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2020-09-23 08:39 GMT   |   Update On 2020-09-23 08:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையின் மூலம் கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, புலியூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த 26 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று விரைவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்” என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News