செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

20 இடங்களில் கொரோனா பரிசோதனை- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2020-09-17 15:30 IST   |   Update On 2020-09-17 15:30:00 IST
புதுவையில் 20 இடங்களில் கொரோனா பரிசோதனை நடைபெறுவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதுவையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சோதனை செய்து கொள்கின்றனர்.

இதற்கிடையே கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிமையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குருவிநத்தம், கொரவள்ளிமேடு, ஆலங்குப்பம், பண்டசோழநல்லூர், மணல்மேடு, கொடாத்தூர், லிங்காரெட்டிபாளையம், பொறையூர், டி.என்.பாளையம், நல்லவாடு, திருவண்டார்கோவில், குருமாம்பட்டு, செல்லிப்பட்டு, மேல்சாத்தமங்கலம், கோர்க்காடு, அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை ஆகிய மையங்களில் செயல்படுகின்றன.

இங்கு காய்ச்சல் முகாம், அதிவிரைவு பரிசோதனை, கொரோனா பரிசோதனைக்கான உமிழ்நீர் சேகரிப்பு, நோயாளிகளை கண்டறிதல் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் தற்போது நடந்து வருகிறது. இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News