செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாணவர்களின் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது -ஐகோர்ட் அதிருப்தி

Published On 2020-09-14 10:13 GMT   |   Update On 2020-09-14 10:13 GMT
நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு அரசு, அரசியல் கட்சிகள், நிதியுதவி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை ஊக்குவிக்கும் என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை:

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையிட்டார். தற்கொலைகளை தடுக்கும் உத்தரவை அரசு சரியாக செயல்படுத்தவில்லை எனவும் முறையிட்டார். 

அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது, மாணவர்களின் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என்று அதிருப்தி தெரிவித்தனர். 

நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு அரசு, அரசியல் கட்சிகள், நிதியுதவி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை ஊக்குவிக்கும். இதுபோன்ற செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News