செய்திகள்
மின்சார நிறுத்தம்

திமிரி, மாம்பாக்கம் பகுதிகளில் 15-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2020-09-13 17:12 IST   |   Update On 2020-09-13 17:12:00 IST
திமிரி, மாம்பாக்கம் பகுதிகளில் 15-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ஆற்காடு அருகே உள்ள திமிரி, மாம்பாக்கம் துணை மின்நிலையங்களில் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனையொட்டி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி, திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர் (ஒரு பகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், லாடவரம், பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News