புதுவையில் மேலும் 7 கட்டுப்பாட்டு மண்டலம்- கலெக்டர் அறிவிப்பு
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக 7 கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத்துறை செயலரும், கலெக்டருமான அருண் அறிவித்துள்ளார்.
புதுவை ரெட்டியார் பாளையத்தில் காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவழநகர் முத்தாலம்மன் கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் இருளன்சந்தை வ.உ.சி. நகர், திலாசுப்பேட்டை தேரடி வீதி, அபிஷேகபாக்கம் அம்பேத்கார் வீதி, மடுகரை மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, புது சாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இப்பகுதியில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் அருண் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடு மண்டலம் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணிதுறை உள்ளிட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.