செய்திகள்
மருத்துவ முகாம்

டி.என்.பாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-12 12:58 IST   |   Update On 2020-09-12 12:58:00 IST
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் டி.என்.பாளையம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பாகூர்:

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் டி.என்.பாளையம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் சதீஷ் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் செய்தனர். இதில், பங்கேற்ற பொதுமக்களுக்கு, முககவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டது. இதில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, வட்டார விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், கிராம சேவக்குகள் சந்திரமோகன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News