செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் தேர்வை மத்திய அரசு எப்போது நிறுத்தும்? முக ஸ்டாலின்

Published On 2020-09-09 19:58 IST   |   Update On 2020-09-09 19:58:00 IST
மத்திய அரசு நீட் தேர்வை எப்போது நிறுத்தும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) தற்கொலை செய்து கொண்டார். மாணவன் விக்னேஷின் தற்கொலை மனவேதனையை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைத் தவிர்த்திடுங்கள் என மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். 

அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் அரசின் முரண்பாடான கருத்துகளால் மாணவர்கள் எதிர்காலம் வதைபடுகிறது. அமைச்சரும் மற்றவர்களும் முரண்பாடான கருத்தைக் கூறுவது அரசின் தெளிவில்லாத நிலையை காட்டுகிறது. மாணவர்களின் நியாயமான தகுதியான வேலை வாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News