செய்திகள்
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-09 06:47 GMT   |   Update On 2020-09-09 06:47 GMT
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகாசியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ரிசர்வ்லைன் தேவர் சிலை அருகில் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாசி யூனியன் துணைத்தலைவரும், ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை அமைப்பாளர் திலிபன்மஞ்சுநாத் முன்னிலை வகித்தார். இதில் பிரவீன்குமார், முத்துபாண்டியன், ராஜ்குமார், மாரீஸ்வரன், அந்தோணிராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதேபோல் சிவகாசி நகராட்சி அலுவலகம் எதிரில் நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெயில்ராஜ் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் காளிராஜன் முன்னிலை வகித்தார். ராமமூர்த்தி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள எம்.பி. வீட்டின் முன்பு தி.மு.க. இளைஞர் மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இக்சாஸ் இப்ராகிம், நகர மாணவரணி அமைப்பாளர் நாகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News