செய்திகள்
அபராதம்

அறந்தாங்கியில் முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-09-06 13:07 IST   |   Update On 2020-09-06 13:07:00 IST
அறந்தாங்கியில் முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி நகராட்சியில் நேற்று நகராட்சி அலுவலர்கள், ஆவுடையார்கோவில் சாலை, அக்னிபஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களிடமும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவர்களிடமும் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.8 ஆயிரத்து 450 வசூல் செய்யப்பட்டது.

Similar News