செய்திகள்
கேஎஸ் அழகிரி

எல்ஐசி பங்குகளை விற்க கூடாது- கேஎஸ் அழகிரி வலியுறுத்தல்

Published On 2020-09-06 03:52 GMT   |   Update On 2020-09-06 03:52 GMT
எல்ஐசி பங்குகளை விற்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்.ஐ.சி. பங்கு விற்பனையை விற்பனை செய்யும் அரசின் முடிவு, தேச பொருளாதாரத்திற்கோ, இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கோ நல்லதல்ல.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்குகிற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இந்த முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மீது இருக்கிற நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்.

மத்திய அரசின் முயற்சியை முறியடித்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை காப்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News