செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-09-05 17:01 GMT   |   Update On 2020-09-05 17:01 GMT
சென்னையில் இன்று 1444 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 859 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,845 ஆக உள்ளது.  இதுவரை 1,26,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்றைய தேதியில் 11,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 52,12,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 52 (உயிரிழப்பு - 00)
2.செங்கல்பட்டு - 357 (உயிரிழப்பு -04)
3. சென்னை - 1537 (உயிரிழப்பு -19)
4. கோவை - 366 (உயிரிழப்பு - 01)
5. கடலூர் - 314 (உயிரிழப்பு -04)
6. தருமபுரி - 03 (உயிரிழப்பு -00)
7. திண்டுக்கல் - 72 (உயிரிழப்பு -00)
8. ஈரோடு - 60 (உயிரிழப்பு -01)
9. கள்ளக்குறிச்சி - 116 (உயிரிழப்பு -01)
10. காஞ்சிபுரம் - 240 (உயிரிழப்பு -01)
11. கன்னியாகுமரி - 14 (உயிரிழப்பு -05)
12. கரூர் - 63 (உயிரிழப்பு -00)
13. கிருஷ்ணகிரி - 57 (உயிரிழப்பு -00)
14. மதுரை- 42 (உயிரிழப்பு -00)
15. நாகப்பட்டினம்- 47  (உயிரிழப்பு -00)
16. நாமக்கல் - 85 (உயிரிழப்பு -00)
17. நீலகிரி - 52 (உயிரிழப்பு -01)
18. பெரம்பலூர் - 30 (உயிரிழப்பு -00)
19. புதுக்கோட்டை - 139 (உயிரிழப்பு -03)
20. ராமநாதபுரம் - 39 (உயிரிழப்பு -01)
21. ராணிப்பேட்டை - 186 (உயிரிழப்பு -02)
22. சேலம் - 276 (உயிரிழப்பு -06)
23. சிவகங்கை - 35 (உயிரிழப்பு -00)
24. தென்காசி - 36 (உயிரிழப்பு -00)
25. தஞ்சாவூர் - 91 (உயிரிழப்பு -01)
26. தேனி - 174 (உயிரிழப்பு -01)
27. திருப்பத்தூர் - 92 (உயிரிழப்பு -01)
28. திருவள்ளூர் - 99 (உயிரிழப்பு -01)
29. திருவண்ணமலை - 225  (உயிரிழப்பு -00)
30. திருவாரூர் - 187 (உயிரிழப்பு -02)
31. தூத்துக்குடி - 95 (உயிரிழப்பு -00)
32. திருநெல்வேலி - 101 (உயிரிழப்பு -03)
33. திருப்பூர் - 96 (உயிரிழப்பு -02)
34. திருச்சி - 108 (உயிரிழப்பு -01)
35. வேலூர் - 156 (உயிரிழப்பு -00)
36. விழுப்புரம் - 192 (உயிரிழப்பு -00)
37. விருதுநகர் - 25 (உயிரிழப்பு -00)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 00
இரயில்வே - 00
Tags:    

Similar News