செய்திகள்
கன்னியாகுமரி கலெக்டர்

கொரோனாவுக்கு வாலிபர் பலி: இளைஞர்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2020-09-05 11:27 GMT   |   Update On 2020-09-05 11:27 GMT
கொரோனாவுக்கு வாலிபர் பலியான சம்பவத்தையடுத்து இளைஞர்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒரு வருக்கு தொடர்ந்து 12 நாட்களாக காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது. அவர் உரிய பரிசோதனை செய்துகொள்ளாமல் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வெளி நோயாளியாக சிகிச்சை எடுத்துக்கொண்டு பரிசோதனையை தவிர்த் துள்ளார். ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் அதிகமாகவே நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்ந்துள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆனால் இது முதியவர்களை மட்டுமல் லாமல் இளைஞர்களையும் பாதிப்புக்குள் ளாக்குகிறது என்பதை இத்தகைய சம்பவங்கள் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொரு நாளும் மாவட்ட நிர்வாகத்தால் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் அறிகுறிகள் தோன்றியவுடனேயே உரிய பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முககவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 50 பேருக்கு இன்று அபராதமாக ரூ.5,000 வசூலிக்கப்பட்டது.

இதில் கோவிட் சுகாதார மையத்திலிருந்து 73 பேர் மற்றும் கோவிட் கவனிப்பு மையத்திலிருந்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8,641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6,344 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News