செய்திகள்
உடையார்பாளையம் கிராவல் மண் கடத்தியவர் கைது - டிராக்டர் பறிமுதல்
உடையார்பாளையம் கிராவல் மண் கடத்தியவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் பகுதியில் நேற்று காலை தாசில்தார் கலைவாணன், ஜெயங்கொண்டம் மண்டல துணை தாசில்தார் ஜானகிராமன், உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் ஆகியோர் மணல் திருட்டு நடக்கிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ஜோதிமணியின் மகன் ராமராஜன்(வயது 32), உடையார்பாளையம் பெரிய ஏரி அருகே டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வந்தது, அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமராஜனையும், டிராக்டரையும் உடையார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜனை கைது செய்தனர்.