செய்திகள்
அரசு கொறடா ராஜேந்திரன்

அரியலூரில் ரூ.2.71 கோடியில் நலத்திட்ட உதவி- அரசு தலைமை கொறடா வழங்கினார்

Published On 2020-08-28 16:58 IST   |   Update On 2020-08-28 16:58:00 IST
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர்:

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர குப்பைவண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் வேளாண் இயந்திரவாடகை மையம் அமைத்திட நான்குஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு கூட்டமைப்புகளுக்கும் மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும் வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்குரூ.2,92, 500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், 7 நபர்களுக்கு ரூ.53,200 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களும், ரூ.45,000 மதிப்புள்ளநவீன செயற்கைகை ஒரு நபருக்கும், 10 நபர்களுக்கு ரூ.57,500மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 8 நபர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் ரூ.1,45,000மதிப்பிலான காசோலைகளை 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News