செய்திகள்
கோப்புபடம்

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி அடித்து கொலை

Published On 2020-08-28 15:30 IST   |   Update On 2020-08-28 15:30:00 IST
தேவாரம் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). மினி பஸ் டிரைவர். இவரது மனைவி காளியம்மாள் (38) இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒருமகன் உள்ளனர். கணவன், மனைவி 2 பேரும் கேரளாவில் வேலை பார்த்து வந்தனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரிலேயே இருந்து வந்தனர். காளியம்மாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இது செல்வக்குமாருக்கு தெரிய வரவே அவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் காளியம்மாள் அந்த வாலிபருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

நேற்று இரவு காளியம்மாள் தனது கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த செல்வக்குமார் அவர்களை விரட்டிச் சென்று காளியம்மாளை கீழே தள்ளி விறகு கட்டையால் தாக்கினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

Similar News