செய்திகள்
உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது
உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் நேற்று இடையார் சாலை, தத்தனூர்குடிகாடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 25), இடையார் கிராமத்தை சேர்ந்த மணி(28), தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்த அன்புமணி(50) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.