செய்திகள்
மரவள்ளிக்கிழங்கு

வாழை, மரவள்ளி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 31-ந் தேதி கடைசி நாள்

Published On 2020-08-25 12:36 IST   |   Update On 2020-08-25 12:36:00 IST
பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும், கடன்பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் ஏற்படும் சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் தோட்டக்கலை துறை மூலம் பயிர் காப்பீடு செய்ய இலக்கு பெறப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு முறையே ரூ.3,157 மற்றும் ரூ.1,457 என பிரீமியமாக செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும், கடன்பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Similar News