செய்திகள்
காட்பாடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 28 பேருக்கு கொரோனா
காட்பாடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி:
காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் 58 வயது நபர். இவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காந்திநகரில் 84 வயது மூதாட்டி உள்பட 6 பேரும், காட்பாடியில் 3 பேரும் ,சேனூர், செங்குட்டை, ஆரிமுத்து மோட்டூர், திருநகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
மேலும் கரிகிரி, கரசமங்கலம், பிரம்மபுரம், தாராபடவேடு, குகையநல்லூர், பாலாஜிநகர், முத்தமிழ்நகர், பாரதிநகர், விருதம்பட்டு, சின்னபள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் 15 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் வேலூரில் உள்ள தனியார் மருத்துமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொற்றால் பாதித்தவர்களின் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.