செய்திகள்
மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2020-08-15 07:35 GMT   |   Update On 2020-08-15 07:35 GMT
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதி பகுதியில் லம்பி வைரஸ் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதி பகுதியில் லம்பி வைரஸ் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் தினேஷ்குமார், செல்வவிநாயகி, கவியரசன், புவனேஸ்வரி, நடமாடும் கால்நடை மருத்துவப்பிரிவு பாண்டியராஜன், மற்றும் பணியாளர்கள் இணைந்து கால்நடைகளுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுத்தனர். இந்த சிறப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News