செய்திகள்
கோப்புபடம்

தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2020-08-05 21:32 IST   |   Update On 2020-08-05 21:32:00 IST
தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஜர்த்தலை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகன் கோகுல் (வயது 20). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டிருந்ததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் பெருமாளின் தந்தைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தாத்தா இறந்ததால் கோகுல் துக்கத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோகுல் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News