செய்திகள்
குடிநீர் எந்திரம் அமைச்சர் திறந்து வைத்தார்

கொரோனா சிகிச்சை மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம்- அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2020-08-03 12:04 GMT   |   Update On 2020-08-03 12:04 GMT
சிவகங்கையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 252 படுக்கைகள் கொண்ட தனிமை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மேலும் ரூ.1.62 லட்சம் செலவில் கூடுதலாக 25 படுக்கைகள் கொண்ட அறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கூடுதல் படுக்கைகள் கொண்ட அறை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை திறந்து வைத்தார். இதில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர்(மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவ கல்லூரி கண்காணிப்பு மருத்துவர் மீனா, உதவி கண்காணிப்பு அலுவலர் ரபீக்முகமது, சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், நிலைய மருத்துவர் பிரகாஷ், சமூக ஆர்வலர் அயோத்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News