செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா மருத்துவ பரிசோதனை

Published On 2020-08-02 15:18 IST   |   Update On 2020-08-02 15:18:00 IST
அந்தியூர் அருகே கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஜே.ஜே.நகர் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நபர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த நபர் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டதுடன்,  அவருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 

அதுமட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஸ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தியாபாளையம் கரைமேடு பகுதியில் 187 பேருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Similar News