செய்திகள்
முககவசம்- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் அபராதம்
பெருந்துறையில் முககவசம்- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று பெருந்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களில் முககவசம் அணியாமல் வந்ததற்காக 50 பேருக்கு தலா ரூ.50-ம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக மேலும் 15 பேருக்கு தலா ரூ.100-ம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஒலிபெருக்கி மூலம் முககவசம் அணிவதின் அவசியம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அதுமட்டுமின்றி முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் இலவசமாக முககவசங்களை வழங்கினர்.