செய்திகள்
மாமல்லபுரத்தில் மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு
மாமல்லபுரத்தில் உள்ள மதுக்கடையில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதுக்கடை உள்ளது. நேற்று வழக்கம் போல் மதுக்கடையை திறக்க வந்த மேற்பார்வையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்தார். அதில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 1 லிட்டர் அளவுள்ள 4 மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. கடையில் பணம் இல்லாத விரக்தியில் 4 மது பாட்டில்களை மட்டும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து கடையின் மேற்பார்வையாளர் ரமேஷ் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். அந்த மதுக்கடையில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.