செய்திகள்
வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு அபராதம்
அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் மோட்டார் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது வனப்பகுதியை சுற்றி பார்க்க வந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் பிடித்து மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவரது உத்தரவின் பேரில் பிடிபட்ட 3 பேருக்கும் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.