செய்திகள்
கிருமி நாசினி தெளிக்க எந்திரம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

கொரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிக்க எந்திரம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-26 15:22 IST   |   Update On 2020-07-26 15:22:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசின் சார்பில் புதிதாக வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு எந்திரம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.13½லட்சம் மதிப்பில் டெங்கு ஒழிப்பிற்கான புகை அடிக்கும் எந்திரம் ஆகியவற்றின் தொடக்க விழா திருப்புவனத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சுகாதார பணிகளின் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, செயல் அலுவலர் சந்திரகலா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், தாசில்தார் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சோனைரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News