செய்திகள்
வெவ்வெறு சம்பவங்கள்- 2 மாணவிகள் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் டாக்டராக வேண்டி நீட் தேர்விற்கு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பூலான்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருப்பத்தூர் அருகே உள்ள மணக்குடி பகுதியை சேர்ந்த செல்வம் மகள் ஜெயப்பிரியா(வயது 19). இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-வது ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.