செய்திகள்
வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் 45 ரேசன் கடைகள் மூடல்

Published On 2020-07-13 06:48 GMT   |   Update On 2020-07-13 06:48 GMT
வேலூர் மாவட்டத்தில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் 45 ரேசன் கடைகள் மூடப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் 45 ரேசன் கடைகள் மூடப்பட்டது.

ரேசன் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதற்கிடையே மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேசன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News