செய்திகள்
கொட்டாறு

குடியாத்தம் பகுதியில் பலத்த மழை- கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-07-11 08:39 GMT   |   Update On 2020-07-11 08:39 GMT
குடியாத்தம் பகுதியில் பெய்த மழையால் கொட்டாற்றில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குடியாத்தம்:

குடியாத்தம் நகரம், கிராமப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேல் ஆலத்தூர், பட்டு மேல்முட்டுகூர், சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குடியாத்தம் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

அதேபோல் குடியாத்தம் எல்லைப்பகுதியான சைனகுண்டாவை அடுத்த ஆந்திர மாநில பகுதியிலும் பலத்த மழை பெய்தது. நேற்று சைனகுண்டா, கொட்டமிட்டா, மேல்கொல்லப்பல்லி, மோடிகுப்பம் வழியாகச் செல்லும் கொட்டாற்றில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதே கொட்டாற்றில் ஆர்.கொல்லப்பல்லி பாலத்தைத் தாண்டி மழை வெள்ளம் ஓடியது. குடியாத்தம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு இடத்தில் ஆற்றில் ஓடிய மழை வெள்ளத்துக்கு விவசாயிகளும், கிராம மக்களும் பூஜை செய்து மலர் தூவினர். மழை வெள்ளத்தால் குடியாத்தம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News