செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூரில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-09 18:40 IST   |   Update On 2020-07-09 19:50:00 IST
கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,480 ஆக உயர்ந்துள்ளது.




Similar News