செய்திகள்
கைது

கரூரில் மணல் கடத்திய 5 பேர் கைது

Published On 2020-07-07 11:48 GMT   |   Update On 2020-07-07 11:48 GMT
கரூரில் மணல் கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
கரூர்:

கரூர் வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்புச்சிபாளையம், மேலசக்கரபாளையம், எல்லைமேடு பிரிவு, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ், திருச்சி காட்டுப்புத்தூர் சங்கரிநகர் பகுதியை சேர்ந்த சிவா, நாமக்கல் மாவட்டம், ராசிபாளையம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், பாலப்பட்டியை சேர்ந்த குமரேசன், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், சின்னமலையூர் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்கள், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News