செய்திகள்
கீழக்குளத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கீழக்குளத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குளத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் கிராமத்திற்கு கொண்டு வரும் ராட்சத குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டு குடிநீர் வராமல் இருந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாகவே கீழக்குளத்தூர் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கிராமத்தில் தற்போது குடிநீர் வராததால் அருகே உள்ள வடுகபாளையம் கிராமம் வரை நடந்தும், இருசக்கர வாகனத்தில் சென்றும் குடிநீர் கொண்டு வரும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பக்கத்து கிராமத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காலிக்குடங்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வடுகபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கூடிய விரைவில் குடிநீர் வர ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.