செய்திகள்
போலீசார் விசாரணை

2 பெண்கள் கடத்தலா?- போலீசார் விசாரணை

Published On 2020-06-15 20:15 IST   |   Update On 2020-06-15 20:15:00 IST
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவரது மகள் அஞ்சு(வயது 20). இவருக்கும், கடலூர் மாவட்டம், பெண்ணாடம் புங்கனூர் ஏரி கரை தெருவை சேர்ந்த அருள் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஞ்சு தனது தாய் வீடான கொடுக்கூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அஞ்சுவும், அவரது அக்கா சூர்யாவும் சேர்ந்து பொருட்கள் வாங்க ஜெயங்கொண்டம் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்ப ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அஞ்சு கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மஞ்சுவின் தாய் தாமரைச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அஞ்சு கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் திடீர் குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் கீர்த்தனா(19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் முந்திரி தோப்பிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள், தோழிகள் வீடு என எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் ராஜேஸ்வரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து கீர்த்தனா கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News