செய்திகள்
தற்கொலை

டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-06-15 13:37 IST   |   Update On 2020-06-15 13:37:00 IST
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். நெசவுத்தொழிலாளியான இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவர் ஜெயச்சந்திரன் (வயது 13). 9-ம் வகுப்பு மாணவன்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்த மாணவன் ஜெயச்சந்திரன், எந்நேரமும் டி.வி.யையே பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை அவனது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனம் உடைந்த ஜெயச்சந்திரன், வீட்டில் தூக்குப்போட்டு கொண்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், ஜெயச்சந்திரனை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News