செய்திகள்
வெளியூர்களில் இருந்து அந்தியூர் வந்த 156 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
வெளியூர்களில் இருந்து அந்தியூர் வந்த 156 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் இருந்து வேலை விஷயமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இ-பாஸ் மூலம் அந்தியூருக்கு வந்தனர். அவ்வாறு வந்த அனைவருக்கும் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 113 பேர் இமாச்சல்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, ஒடிசா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 43 பேர் என மொத்தம் 156 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் சென்னையில் இருந்து வந்த 3 பேர் மட்டும் பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்தியூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.